By Anish Uma Kishore
"அன்பு மகளே
அன்றொரு நாள் ,எழுதத் தெரியா பேதை மகளுக்கு.//.1
பரீட்சை எழுதச் சென்றேன் -நான்//2
பாடம் பயின்றது நான் அன்றோ ?//3
ஞானம் புகட்டியது அவள் அன்றோ ?//4
அன்பும் பண்பும் இரு கண்கள் அவளுக்கு //5
பரீட்சை எழுதத் தொடங்கும் முன் //6
ஆயிரம் ஆயிரம் கேள்விகள் ? – என்னிடம்! //7
சாப்பிட்டீர்களா அம்மா ? எழுதுக் கோள் எடுத்துத் தரவா அம்மா ? //8
எப்படிப் பயணீத்தீர்கள்?, களைப்பாய் இருக்கிறீர்களா அம்மா ?//9
தாகம் தீரத் தண்ணீர் பருகுங்கள்-பின் //10
மெதுவாய் விடை எழுதலாம் – என்றால் //11
எத்தனை எத்தனை அம்மாக்கள் ?//12
என் கருவறையும் வைகறை கண்டது, //13
அவள் ஒதிய ‘அம்மாக்களால் ‘-அன்று //14
என் எழுத்துக்களுக்கு விருதுக் கிடைத்தது ,//15
அவள் கூறிய விடைகளை எழுதியதால்//16
யான் பயின்ற பட்டமும் பாடமும்//17
பரவசமடைந்தது அவளின் பாசுரத்தால் //18
ஆணவமும் அகங்காரமும் மண்டியிட்டது மங்கையின் மாண்பின்முன்//19
வண்ணங்களிலா வாழ்க்கை ? – இல்லையில்லை //20
நல் எண்ணங்களே வாழ்க்கையென! //21
போதிமரத்துப் புத்தனாய் ! ஞானக்குருவாய் !! //22
சக்தியாய், யுக்தியாய், சித்தியாய், பாரதியாய் !! //23
என்றும் என் அகக் கண்ணில், அழியா ஒவியமாய்!! //24"